தகவலுக்கான உரிமை எனப்படுவது யாது?

பகிரங்க அதிகாரசபைகளின் (அரச அலுவலகங்கள்) கட்டுப்பாட்டில் உள்ள தகவல்களை அறிந்து     கொள்வதற்கு தற்போது உங்களிற்கு உள்ள அடிப்படை உரிமையே தகவலுக்கான உரிமை ஆகும்.   ‘2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க, தகவலுக்கான உரிமைச் சட்டம்” இவ் உரிமைக்கான        விபரங்களைக் கொண்டுள்ளது.

‘தகவல்” என்பது பதிவேடுகள், ஆவணங்கள், குறிப்புகள், மின்அஞ்சல்கள், அபிப்பிராயங்கள், மதியுரைகள், பத்திரிகை வெளியீடுகள்; சுற்றுநிரூபங்கள், கட்டளைகள், சம்பவத்திரட்டுகள், ஒப்பந்தங்கள், அறிக்கைகள், பதத்திரிகைகள், மாதிரிகள், உருப்படிவம், கடிதத் தொடர்பு, குறிப்பறிக்கை, விரைவுச்சட்டவாக்கம், புத்தகம், திட்டவரைபு, வரைவு, வரைபடம், பட அல்லது வரைபட வேலை, புகைப்படம், திரைப்படம், குறும்படம், ஒலிப்பதிவு, ஒளிநாடா, இயந்திரம் மூலம்   வாசிக்கக்கூடிய பதிவுகள், கணணிப்பதிவுகள் மற்றும் வேறு ஆவண பொருள், உள்ளடங்கலாக அதனது பௌதீக படிவம் அல்லது பண்பு பொருள்படுத்தாமல் ஏதேனும் படிவத்திலான ஏதேனும்    பொருள் மற்றும் அதன் ஏதேனும் பிரதி என்பவற்றை உள்ளடக்குகின்றது.

(CLICK HERE TO READ RTI ACT SEC:43)

குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பெற்றுக்கொள்ளும் விசேட நன்மைகளுக்கான காரணங்கள், தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுவதற்கான அடிப்படைகள், நேர்முகப் பரீட்சைகளின் புள்ளிகள், பாடசாலை அனுமதி மறுப்புக்கான காரணங்கள், அலுவலகங்களின் உள்ளக செயற்பாடுகள்    போன்ற ஏனைய விடயங்களையும் அறிந்துகொள்ளளாம்.

(CLICK HERE TO READ RTI ACT SEC:43)
 • தகவலறியும் கோரிக்கை மறுக்கப்படினும், அதனை அறிவதற்கு முனைவது எமது கடமையாகும்.
 • உறுப்புரை 5(1)கீழ் குறிப்பிடப்பட்ட மட்டுப்பாடுகளின் கீழ் மாத்திரமே கோரிக்கை மறுக்கப்படலாம். அவையாவன:
 • பகிரங்க அக்கறையுடன் தொடர்பற்ற தனிப்பட்ட நபர்களின் தகவல்கள், அரசின் பாதுகாப்பை அல்லது அதன் ஆள்புல இறைமையை அல்லது தேசிய பந்தோபஸ்தை பாதிகக்ககூடியதான தகவல்கள், இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரதூரமான பங்கத்தை விளைவிப்பவை, வணிக வர்த்தக இரகசியங்கள், தனி நம்பக உறவு தொடர்பான எவையேனும் அந்தரங்கம் மற்றும் தனியாள்ம ருத்துவப் பதிவேடுகள், சட்ட நடைமுறைப்படுத்துகை அல்லது தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்கள், மூன்றாம் தரப்பினர் சம்பந்தப்பட்ட தகவல்கள், நீதிமன்ற அவமதிப்பாக உள்ளவிடத்து அல்லது நீதித்துறையின் அதிகாரத்தையும் கடமையையும் மட்டுப்படுத்தும் தகவல்கள், பாராளுமன்றத்தின் அல்லது மாகாணசபையொன்றின் சிறப்புரிமைகளின் மீறலாக உள்ள தகவல்கள், பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படுவதாகவுள்ள பரீட்சைகளையோ தோதல்கள் ஆணையாளாரினால் நடாத்தப்பட்டதுமான தோர்தலொன்றையோ பாதிக்கும் தகவல்கள், அமைச்சரவைக் குறிப்பறிக்கையொன்று தொடர்பாக முடிவொன்று எடுக்கப்பட்டிருக்கவில்லையோ   அந்த அமைச்சரவைக் குறிப்பறிக்கையினதாக தகவல்கள்.
 • எவ்வாறிருப்பினும்தகவலுகக்கான கோரிக்கையொன்றுதகவலின் வெளிவிடுகையின் பகிரங்க அக்கறை அதனது வெளிவிடுகையிலிருந்து விளையும் தீங்கை விஞ்சியிருக்குமிடத்துமறுக்கப்படுதலாகாது.
(CLICK HERE TO READ RTI ACT SEC:5(1))

இல்லை. அவ்வாறு கோரிக்கைக்கான காரணத்தை தெரிவிக்க வற்புறுத்த முடியாது.

(CLICK HERE TO READ RTI ACT SEC:24(5) (d))
 • அவ்வாறான வரமுறைகள் ஏதும் இல்லை.
 • இந்த சட்டமூலம் நிறைவேற்றப் படும்போது குறிப்பிட்ட தகவலானது பெறக்கூடியதாய் இருக்கும் பட்சம், குறித்த இல்லை. முன்னமே பதிவு செய்யப்பட்டுள்ள தகவலை மாத்திரமே கோர முடியும்.நிறுவனமானது 10 வருட காலத்திற்கு அந்த தகவலை கோவைப்படுத்தி பேணவேண்டும்.
 • குறிப்பிட்ட தகவலானது புதிதானதாக இருக்கும் பட்சம், குறித்த நிறுவனமானது 12 வருட காலத்திற்கு அந்த தகவலை கோவைப்படுத்தி பேணவேண்டும்.
(CLICK HERE TO READ RTI ACT SEC:43)

ஆம், பெற முடியும். குறித்த தகவல் தனிநபர் தேவையுடன் தொடர்புற்று இருத்தல் அவசியமன்று.

நீங்கள் விரும்பும் வடிவில் பெற முடியும். (இலத்திரனியல், நகல் பிரதி)

(CLICK HERE TO READ RTI ACT SEC:43)

மூன்றாம் தரபினரால் பகிரங்க அதிகாரசபைக்கு வழங்கப்பட்டு, அன்றிலிருந்து இரகசியம்   பேணப்படும்  தகவல்கள்.

(CLICK HERE TO READ RTI ACT SEC:29(1))

தகவல்களை அறிந்து கொள்ள யாரை அணுக வேண்டும்?

ஒவ்வொரு அரச அலுவலகங்களிலும்; நியமிக்கப்பட்டுள்ள ‘தகவல் அலுவலகர்”.

(CLICK HERE TO READ RTI ACT SEC:25)

அரசியலமைப்பினால் அல்லது அரசியலமைப்பின்கீழ் ஏதேனும் எழுத்திலான சட்டத்தினால் அல்லது சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட குழு அல்லது பதவி. அத்துடன் அரச அனுமதிப் பத்திரம் பெற்ற அல்லது அரச சேவை வழங்கும் தனியார் குழு அல்லது பதவி. அவையாவன:

 • அரசாங்கத்தின் ஓபகிரங்க அதிகாரசபை (அரச அலுவலகங்கள்) எனப்படுவது யாது? ர் அமைச்சு
 • ஓர் அரசாங்கத்தின் திணைக்களம்
 • ஒரு பகிரங்கக் கூட்டுத்தாபனம்
 • ஓர் உள்ளுர் அதிகாரசபை
 • அரசினால் முழுமையாக அல்லது பகுதியளவில் நிதியளிக்கப்பட்ட வாழ்க்கைத்தொழில் அல்லது தொழில்நுட்பக் கல்வியை வழங்குகின்ற அரச, தனியார்; கல்வி நிறுவனங்கள்
(CLICK HERE TO READ RTI ACT SEC:43)

ஆம். அனைத்து அரச நிறுவனங்களிலும் குறைந்தது ஒரு தகவல் அதிகாரி கட்டாயம் நியமிக்கப்படுவார். (இந்த சட்டமூலம் நிறைவேற்றப் பட்டதில் இருந்து தகவல் அதிகாரி நியமிக்கப்படும் வரையுள்ள 3 மாத காலம் வரை குறித்த திணைக்களத்தின் தலைமை அதிகாரி, தகவல் அதிகாரியின் கடமைகளைப் புரிவார்)

(CLICK HERE TO READ RTI ACT SEC:23 1 a)

 

 

(CLICK HERE TO READ RTI ACT SEC:23(1)(a))

ஆம். அவையும் பகிரங்க அதிகாரசபைகளுள் (அரச அலுவலகங்கள்) உள்ளடங்கும்.

(CLICK HERE TO READ RTI ACT SEC:43)

ஆம். அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட பாடசாலைகளின் அனுமதி தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

(CLICK HERE TO READ RTI ACT SEC:43k) (CLICK HERE TO READ RTI ACT SEC:43 (k))

ஆம், இந்த சட்டத்தின் கீழ் மட்டுப்படுத்தப்படாதவிடத்து பெற முடியும்.

இல்லை. அரச பங்குடமைக்கு உட்படுத்தப்படாத மற்றும் அரச பொதுப்பணியில் ஈடுபடாத தனியார் கம்பனி அல்லது தனியார் பிரிவினர் இச் சட்டத்துள் உள்ளடங்கப்பட மாட்டார்கள்.

ஆம். நிறுவனத்தின் அங்கத்தவர்களில் 3ஃ4 வீதமானவர்கள் இந்நாட்டு குடிமக்களாக இருக்கும் பட்சத்தில் தகவல் ஒன்றினை கோர முடியும். நிறுவனம் உத்தியோகபூர்வமாக பதியப்பட்டிருப்பது அவசியமன்று.

இல்லை. குறித்த சில தகவல்கள் மட்டுமே விலக்கப்பட்டுள்ளன.

தகவலிற்கான விண்ணப்பத்திற்கான செயன்முறைகள்

இல்லை. குறித்த தகவல் தொடர்பான விடயத்தையும், அதனை எவ்வாறான வடிவில் பெற விரும்புகின்றீர் என்பதையும்; தெரிவித்தல் போதுமானது.

(CLICK HERE TO READ RTI ACT SEC:25(5)(b))

இல்லை. எழுத்து மூலமான  (இலத்திரனியல் மூலமும் ஏற்றுக்கொள்ளத் தக்க) கோரிக்கை அவசியமாகும். ஆயினும் கோரிக்கைக்கான காரணத்தையோ, குறித்த தகவலுடன் தொடர்புடைய    தனிப்பட்ட தேவையினையோ தெரிவிப்பது அவசியமன்று.

(CLICK HERE TO READ RTI ACT SEC:24-1)
 • தகவல் அலுவலகார் ஒருவர் கோரிக்கையொன்றை விடுக்கின்ற பிரசைக்கு உடனடியாக பதிலளிப்பொன்றை வழங்க இயலுமாக இல்லை. குறித்த தகவல் தொடர்பான விடயத்தையும், அதனை எவ்வாறான வடிவில் பெற        விரும்புகின்றீர் என்பதையும்; தெரிவித்தல் போதுமானது.இருப்பின், அதனை உடனடியாக வழங்குவார்.
 • தகவலை வழங்க முடியுமா இல்லையா எனும் முடிவை 14 வேலை நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். அதிலிருந்து 14 நாட்களுக்குள் தகவலை வழங்க வேண்டும்.
 • கோரப்பட்ட தகவலானது பதிவேடுகளின் பார்pய எண்ணிக்கையாக இருப்பின் அல்லது நீண்ட தொலைவில் இருந்து கொண்டு வரவேண்டிய நியாயமான தேவை இருப்பின், தகவலை வழங்க வேண்டிய சாதாரண 14 நாட்களானது, 21 சாதாரண நாட்களாக நீடிக்கப்படலாம்.
 • தகவலுக்கான கோரிக்கையானது, ஒரு பிரஜையின் உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துடன் சம்மந்தப்படுகின்றவிடத்து, அதற்கான பதிலளிப்பு கோரிக்கை கிடைக்கப்பெற்றதிலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்குள் (48) செய்யப்படுதல் வேண்டும.;

 

(CLICK HERE TO READ RTI ACT SEC:24-4) (CLICK HERE TO READ RTI ACT SEC:25 - 2)

ஆம். தகவலுக்கான உரிமையானது அடிப்படை உரிமை ஆகையால், அவ் உரிமை மறுக்கப்படுகின்ற போது அல்லது பாரியதான தகவலுக்கான உரிமை மீறலின் போதும் நேரடியாக நீதி மன்றத்தை நாடலாம்.

தகவலுக்கான உரிமை  ஆணைக் குழுவின் முடிவிற்கமைய கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.    தகவலுக்கான உரிமை  ஆணைக் குழுவானது இலவசமாக தகவலை வழங்கக் கூடிய ஒரு சில சந்தர்பங்களையும் தெரிவிக்கும். (தகவலுக்கான உரிமை ஆணைக் குழுவானது இன்னமும்நி றுவப்படாத வேளை, அவ்வாறான சந்தர்பங்களை குறிப்பிட முடியாதுள்ளது)

(CLICK HERE TO READ RTI ACT SEC:25-1)

 

(CLICK HERE TO READ RTI ACT SEC:14e) (CLICK HERE TO READ RTI ACT SEC:25-4)

கோரிக்கை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் படிவம் வழங்கப்பட்டதன் பின் அதன்  மூலம் குறித்த நிறுவனத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.

(CLICK HERE TO READ RTI ACT SEC:24-3)

பெறப்படும் தகவலினை உறுதிப்படுத்தித் தருமாறு கோர முடியும். தவறான தகவலை வழங்குதலானது உறுப்புரை 39 (1)(அ) இன் பிரகாரம் குற்றமாகும். தகவலின் உண்மைத் தன்மையில்          சந்தேகம் உள்ளவிடத்து அது தொடர்பான முறைப்பாட்டினை தகவலுக்கான உரிமை  ஆணைக்          குழுவிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கலாம்.

(CLICK HERE TO READ RTI ACT SEC:273b)

ஆம். தகவலுக்கான கோரிக்கையானது, ஒரு பிரஜையின் உயிர்; மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்துடன்  சம்மந்தப்படுகின்றவிடத்து, அதற்கான பதிலளிப்பு கோரிக்கை கிடைக்கப்பெற்றதிலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்குள் (48) செய்யப்படுதல் வேண்டும.;

(CLICK HERE TO READ RTI ACT SEC:245c)

ஆம்.

 • மேன்முறையீட்டு அதிகாரி அல்லது தகவல் அதிகாரி நியாயமற்ற முறையில் தகவலை வழங்க மறுக்குமிடத்து அல்லது தனது கடமையை புரிய தவறுமிடத்து,  விண்ணப்பதாரி தகவலுக்கான உரிமை  ஆணைக் குழுவிடம் முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.
 • அதனையடுத்து தகவலுக்கான உரிமை ஆணைக் குழு, குறிப்பிட்ட ஒழுக்காற்று சபையினரை தகுந்த              நடவடிக்கை எடுக்கப் பணிப்பர். குறிப்பிட்ட ஒழுக்காற்று சபை ஒரு மாத காலத்தினுள் தமது நடவடிக்கை தொடர்பாக அறிவித்தல் வேண்டும்.
 • தகவல்களை அழித்தல், பிழையான தகவல்களை வழங்குதல் போன்ற பாரிய குற்றங்கள்

தொடர்பாக தகவலுக்கான உரிமை  ஆணைக் குழு, நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்

தாக்கல் செய்ய முடியும்.

(CLICK HERE TO READ RTI ACT SEC:38-39)

மேன்முறையீடு

 • கோரிக்கை மறுக்கப்பட்டதிலிருந்து 14 நாட்களுள் மேன்முறையீட்டு அதிகாரியிடம் மேன்முறையீடு ஒன்றை மேற்கௌள முடியும்.
 • மேன் முறையீட்டாளார் அவருடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணத்தினால் குறிப்பிட்ட 14 நாட்;களிற்குள் மேன்முறையீட்டினை மேற்கொள்ள தடுக்கப்பட்டுள்ளார்; என மேன்முறையீட்டு அதிகாரி திருப்திப்படின், குறித்த காலப்பகுதி முடிவடைந்த பின்னரும் மேன்முறையீட்டை                அனுமதிக்கலாம்.
 • மேன்முறையீட்டு அதிகாரி குறித்த மேன்முறையீட்டினை ஏற்பது அல்லது நிராகரிப்பது தொடர்பான முடிவை 3 வார காலத்துள் தெரிவிக்க வேண்டும்.
 • மேன்முறையீட்டு அதிகாரி குறித்த மேன்முறையீட்டினை நிராகரிக்கும் அல்லது மேன்முறையீட்டு தொடர்பான முடிவை 3 வார காலத்துள் தெரிவிக்க தவறும் பட்சம், மீண்டும் 2 மாத காலத்துள்    தகவலுக்கான உரிமை  ஆணைக் குழுவிடம் மேன்முறையீடு ஒன்றை மேற்கௌ;ள முடியும்.
 • தகவலுக்கான உரிமை ஆணைக் குழு, ஒரு மாத காலத்தினுள் மேன்முறையீட்டு அதிகாரியின் அல்லது தகவல் அலுவலரின் முடிவை ஏற்றுகொண்டுள்ளதா இல்லையா என தெரிவிக்க வேண்டும்.
 • தகவலுக்கான உரிமை ஆணைக் குழுவின் முடிவும் திருப்தி அளிக்காத பட்சம், ஒரு மாத     காலத்தினுள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யலாம்.

 

(CLICK HERE TO READ RTI ACT SEC:31)

தண்டனைகள்

இல்லை. ஆனால் தகவலுக்கான உரிமை  ஆணைக் குழுவானது, மேன்முறையீட்டு அதிகாரிக்கு அல்லது தகவல் அலுவலகரிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவோ மற்றும்           நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவோ முடியும். மேற்குறித்த நடவடிக்கை தொடர்பாக   ஆணைக் குழுவிற்கு விண்ணப்பிக்க முடியும்.

 • ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் சந்தர்ப்பங்கள்.
 1. கோரிக்கையை முறையற்ற விதத்தில் ஏற்க மறுத்தல்
 2. நிராகரிப்பிற்கான காரணத்தை தெளிவுபடுத்த மறுத்தல்
 3. மேலதிகமான கட்டணங்களை அறவிடுதல்
 4. கோரிக்கையை செயற்படுத்த தவறுதல்

 

 • குற்றங்கள்
 1. தவறான, பொருத்தமற்ற, பூரணமற்ற தகவலை வழங்குதல்
 2. கோரப்பட்ட தகவலை அழிக்க, செல்லுபடியற்றதாக்க, மாற்ற அல்லது மறைக்க முற்படுதல்
 3. தகவலுக்கான உரிமை  ஆணைக் குழு முன் பிரசன்னமாகாதிருத்தல்
 4.  தகவலுக்கான உரிமை  ஆணைக் குழு முன் பிரசன்னமாதல் ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்காது இருத்தல் மற்றும் வேண்டிய தகவல்களை ஆணைக் குழுவிற்கு கூற மறுத்தல்
 5. தகவலுக்கான உரிமை  ஆணைக் குழுவின் முடிவினை செயற்படுத்தாதிருத்தல்
 6. ஆணைக் குழுவின் செயற்பாடிற்கு ஊறு விளைவித்தல்
(CLICK HERE TO READ RTI ACT SEC:38-39)

தனி நபர் அந்தரங்கம் , பிரசுரிக்கும் உரிமை

நாட்டின் பிரஜைகள் மட்டுமே கோரிக்கைகளை மேற்கொள்ள முடியும். ஆகவே பெயர் குறிப்பிட அவசியம் இல்லை.

கோரிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் மாத்திரமே தகவலானது வழங்கப்படும். தனியாள் தொடர்பான அந்தரங்கத் தகவல்கள் இந்த சட்டமூலத்தின் கீழ்பெ ற்றுக்கொள்ள முடியாது.

மேலதிகத் தகவல்கள்

ஆம். எவ்வாறிருப்பினும், தகவலுக்கான கோரிக்கையொன்று, தகவலின் வெளிவிடுகையின் பகிரங்க அக்கறை அதனது வெளிவிடுகையிலிருந்து விளையும் தீங்கை விஞ்சியிருக்குமிடத்து, மறுக்கப்படுதலாகாது.

(CLICK HERE TO READ RTI ACT SEC:5)

ஆம், தகவலை கோருவது உங்கள் உரிமையாகும். அத் தகவல் உறுப்புரை 5 (1)(ஆ)(1) அமைவாக    மட்டுப்படுத்தப்பட்டதா என தகவல் அதிகாரி முடிவு செய்வார்.

(CLICK HERE TO READ RTI ACT SEC:5-1-b-1)

இல்லை. இந்நாட்டு குடிமக்களிற்கு மட்டுமே தகவல் கோரும் உரிமையுண்டு.

இல்லை. அவ்வாறு வயதெல்லை கிடையாது. நாட்டு குடிமக்கள் யாவரும் தகவல் ஒன்றினை கோர முடியும்.