அதிகாரம் உங்கள் கைகளில்

தகவலுக்கான உரிமையை பயன்படுத்துவோம்

தகவலுக்கான உரிமை என்றால் என்ன?

தகவலுக்கான உரிமை எனப்படுவது பொது அதிகாரசபைகளில் உள்ள பொது தகவல்களை கோருகின்ற அடிப்படை உரிமையாகும். பகிரங்க சபைகளானது நாட்டின் குடிமக்களின் நம்பிக்கைக்குப் பொறுப்பான பல தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு குடிமகனாக அவ்வாறான தகவல்களை அறிவது நம் ஓவொருவரதும் அடிப்படை உரிமையாகும். ஆகஸ்ட் 4 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 2016 ம் ஆண்டின் 12ம் இலக்க, தகவலுக்காக உரிமைச் சட்டமானது தகவல் அறியும் செயன்முறையை விளம்பி நிற்கின்றது. இது குறித்த பகிரங்க சபையில் சாதாரணமாக ஒரு விண்ணப்பத்தை மேற்கொளும் செயன்முறையாகும். சாதாரணமான செயன்முறையின் கீழ் விண்ணப்பித்ததில் இருந்து அதிக பட்சம் 28 நாட்களுள் குறித்த தகவலை பெற்றுக்கொள்ள முடியும். (தகவலானது எண்ணிக்கையில் அதிகமாக அல்லது தொலைவிலிருந்து கொண்டுவரவேண்டுய தேவை இருப்பின் கால அவகாசமானது 21 நாட்களாக நீடிக்கப்படலாம். )மேலும் அறியவும்

இருளை நீக்கி

தகவலறியூம் உரிமை சாதாரண மக்கள் மூவரின் கோணத்தில் பார்க்கப்படும்

30 நிமிட குறுந்திரைப்படம் (சிறு கதை?)

எமது நிகழ்வுகள்

தகவல் அறியும் உரிமையை பெற்றுக்கொண்ட நாள் தொடக்கம் கடந்த மூன்று வருடங்களாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் இணைந்திருந்த பிரஜைகளுடன் எமது வெற்றிகளையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக மக்கள் அடைந்த பயன்களை பகிர்ந்துகொள்வதற்காகவும் இரண்டு மாதங்களுக்கொருமுறை வெளியிடப்படுகின்ற ‘குரல்’ சஞ்சிகை உங்களுக்காக. Read News Letter
செப்டெம்பர் 23ம் திகதி RTI வேன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடுத்த பயணத்தை தொடர்ந்தது. இரத்தினபுரி மாத்தறை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்களில் தரித்துச் சென்றது. பெரும்பாலான இடங்களில் அறிந்து கொள்வதில் மக்கள் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் ஈடுபட்டனர்.
செப்டெம்பர் 16ம் திகதி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மற்றும் சர்வோதயத்தின் தலைமையில் RTI வேன் அனுராதபுரம் சென்று 2 நாட்கள் மாவட்டத்தின் 10 இடங்களில் தரித்து நின்றது. 18ம், 19ம் திகதிகளில் திருகோணமலையில் காணப்பட்டது. ஓவ்வொரு இடத்திலும் RTI தொடர்பான குறும்படம் பொதுமக்களுக்கு திரையிடப்படப்பட்டது. அத்தோடு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் RTI தொடர்பாக விழிப்புணர் வழங்கப்பட்டது. எமது சட்ட அலுவலர்கள் RTI விண்ணப்பங்களை பூர்த்திசெய்வதற்கு பொதுமக்களுக்கு அவ்விடங்களில் உதவிகளை வழங்கினர்.
செப்டெம்பர் 12ம் திகதி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா மாத்தறையில் தகவலுக்கான உரிமைக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கியது. கூட்டமைப்பினர் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து பொதுநிர்வாகம் நீர் மற்றும் சுகதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய கருப்பொருளில் இவர்கள் பங்குபற்றினர். பங்குபற்றுனர்கள் மிகவும் ஆர்வமாக கலந்துகொண்டதுடன் தமது நாளாந்த வேலைகளில் தகவலுக்கான உரிமையை TISL ன் உதவியுடன் பயன்படுத்தவும் முன்வந்தனர்.

சமூக வலைத்தள தகவல்கள்

சுவூஐ செய்திகள்

VIEW ALL -
TOP