செப்டெம்பர் 16ம் திகதி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மற்றும் சர்வோதயத்தின் தலைமையில் RTI வேன் அனுராதபுரம் சென்று 2 நாட்கள் மாவட்டத்தின் 10 இடங்களில் தரித்து நின்றது. 18ம், 19ம் திகதிகளில் திருகோணமலையில் காணப்பட்டது. ஓவ்வொரு இடத்திலும் RTI தொடர்பான குறும்படம் பொதுமக்களுக்கு திரையிடப்படப்பட்டது. அத்தோடு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் RTI தொடர்பாக விழிப்புணர் வழங்கப்பட்டது. எமது சட்ட அலுவலர்கள் RTI விண்ணப்பங்களை பூர்த்திசெய்வதற்கு பொதுமக்களுக்கு அவ்விடங்களில் உதவிகளை வழங்கினர்.