செப்டெம்பர் 16ம் திகதி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா மற்றும் சர்வோதயத்தின் தலைமையில் RTI வேன் அனுராதபுரம் சென்று 2 நாட்கள் மாவட்டத்தின் 10 இடங்களில் தரித்து நின்றது. 18ம், 19ம் திகதிகளில் திருகோணமலையில் காணப்பட்டது. ஓவ்வொரு இடத்திலும் RTI தொடர்பான குறும்படம் பொதுமக்களுக்கு திரையிடப்படப்பட்டது. அத்தோடு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் RTI தொடர்பாக விழிப்புணர் வழங்கப்பட்டது. எமது சட்ட அலுவலர்கள் RTI விண்ணப்பங்களை பூர்த்திசெய்வதற்கு பொதுமக்களுக்கு அவ்விடங்களில் உதவிகளை வழங்கினர்.
செப்டெம்பர் 12ம் திகதி ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா மாத்தறையில் தகவலுக்கான உரிமைக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பொன்றை உருவாக்கியது. கூட்டமைப்பினர் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து பொதுநிர்வாகம் நீர் மற்றும் சுகதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய கருப்பொருளில் இவர்கள் பங்குபற்றினர். பங்குபற்றுனர்கள் மிகவும் ஆர்வமாக கலந்துகொண்டதுடன் தமது நாளாந்த வேலைகளில் தகவலுக்கான உரிமையை TISL ன் உதவியுடன் பயன்படுத்தவும் முன்வந்தனர்.
செப்டெம்பர் 7ம் திகதி அம்பாறையில் சிவில் சமூகக் குழுக்களின் பிரதிநிதிகள் 50 பேரைக் கொண்ட குழுவினருக்கு RTI தொடர்பான ஒரு நாள் பயிற்சி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடாத்தப்பட்டது. பல முக்கியமான பிரச்சினைகள் எழுப்பப்பட்டதுடன் RTI ஊடாக அவற்றுக்கான தகவல்களை பெறலாம் என்கின்ற அர்ப்பணிப்புடன் நிறைவடைந்தது.