அதிகாரம் உங்கள் கைகளில்

தகவலுக்கான உரிமையை பயன்படுத்துவோம்

தகவலுக்கான உரிமை என்றால் என்ன?

தகவலுக்கான உரிமை எனப்படுவது பொது அதிகாரசபைகளில் உள்ள பொது தகவல்களை கோருகின்ற அடிப்படை உரிமையாகும். பகிரங்க சபைகளானது நாட்டின் குடிமக்களின் நம்பிக்கைக்குப் பொறுப்பான பல தகவல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு குடிமகனாக அவ்வாறான தகவல்களை அறிவது நம் ஓவொருவரதும் அடிப்படை உரிமையாகும். ஆகஸ்ட் 4 ஆம் திகதி 2016 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 2016 ம் ஆண்டின் 12ம் இலக்க, தகவலுக்காக உரிமைச் சட்டமானது தகவல் அறியும் செயன்முறையை விளம்பி நிற்கின்றது. இது குறித்த பகிரங்க சபையில் சாதாரணமாக ஒரு விண்ணப்பத்தை மேற்கொளும் செயன்முறையாகும். சாதாரணமான செயன்முறையின் கீழ் விண்ணப்பித்ததில் இருந்து அதிக பட்சம் 28 நாட்களுள் குறித்த தகவலை பெற்றுக்கொள்ள முடியும். (தகவலானது எண்ணிக்கையில் அதிகமாக அல்லது தொலைவிலிருந்து கொண்டுவரவேண்டுய தேவை இருப்பின் கால அவகாசமானது 21 நாட்களாக நீடிக்கப்படலாம். )மேலும் அறியவும்

இருளை நீக்கி

தகவலறியூம் உரிமை சாதாரண மக்கள் மூவரின் கோணத்தில் பார்க்கப்படும்

30 நிமிட குறுந்திரைப்படம் (சிறு கதை?)

எமது நிகழ்வுகள்

செப்டெம்பர் 7ம் திகதி அம்பாறையில் சிவில் சமூகக் குழுக்களின் பிரதிநிதிகள் 50 பேரைக் கொண்ட குழுவினருக்கு RTI தொடர்பான ஒரு நாள் பயிற்சி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடாத்தப்பட்டது. பல முக்கியமான பிரச்சினைகள் எழுப்பப்பட்டதுடன் RTI ஊடாக அவற்றுக்கான தகவல்களை பெறலாம் என்கின்ற அர்ப்பணிப்புடன் நிறைவடைந்தது.

சமூக வலைத்தள தகவல்கள்

சுவூஐ செய்திகள்

VIEW ALL -
TOP