பொதுவான விடயங்கள்

பொது நிறுவனங்களிற்கான (குறிப்பாக அரச திணைக்களங்கள்) உள்ள தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான அடிப்படை உரிமையே தகவலிற்கான உரிமை எனப்படும்.

இலங்கைக் குடியரிமை உடையவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். உங்கள் வயதெல்லை 18ஐ விட அதிகமாக இருப்பது அவசியம் இல்லை.

தகவல் என்பது எவ்வடிவிலுமான பதிவேடுகள், ஆவணங்கள், குறிப்புக்கள், மின்னஞ்சல், அபிப்பிராயங்கள், மதியுரைகள், பத்திரிகை, மாதிரிகள், உறுபடிவம், கடிதத் தொடர்பு, குறிப்பறிக்கை, விரைவுச்சட்டவாக்கம், புத்தகம், திட்டவரைவு, வரைவு, வரைபடம், பட அல்லது வரைபட வேலை, புகைப்படம், திரைப்படம், குறும்படம், ஒலிப்பதிவு, ஒளிநாடா, இயந்திரம் மூலம் வாசிக்கக்கூடிய பதிவுகள், கணணிப்பதிவுகள் மற்றும் வேறு ஆவணப் பொருட்கள், உள்ளடங்கலாக அதனது பௌதீக படிவம் அல்லது பண்புபொருள்படுத்தாமல் ஏதேனும் படிவத்திலான ஏதேனும் பொருள் மற்றும் அதன் ஏதேனும் பிரதி என்பன உள்ளடங்குகின்றது.

இல்லை. தகவல் பெறுநரின் தனிப்பட்ட தேவைகளுடன் தொடர்புற்று இருத்தல் அவசியமில்லை.

அரசியலமைப்பின் கீழ் அல்லது எழுத்துருவான சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட ஏதும் ஓர் அலுவலகம் / நிறுவனம் / திணைக்களம் / அமைப்பு / மற்றும் அரச அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அல்லது அரச செயல்பாடுகளை அல்லது சேவையை புரிகின்ற தனியார் அமைப்புக்கள் மற்றும் அதிகாரசபைகள்.

உதாரணம்: அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், பகிரங்க கூட்டுத்தாபனம், உள்ளுர் அதிகாரசபைகள், பொலிஸ், நீதிமன்றங்களும் நியாய சபைகளும் கம்பனிச் சட்டம் 2007க்கு அமைய ஆரம்பிக்கப்பட்டு அரச அல்லது தனியாரது / அரச மற்றும் தனியாரது 25% வீதத்திற்கும் மேற்பட்ட பங்குகளை கொண்டுள்ள கம்பனிகள் அரசினால் நிதி அளிக்கப்பட்டு இயங்கிவரும் உயர் கல்வி நிறுவனங்கள், அரசினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட மற்றும் பகுதியளவில் நிதியளிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் ஏனையவை.

உங்களது வேண்டுகோளிற்கு இணங்க தகவலை வழங்கும் கடமையுடைய ஒவ்வொரு பொது நிறுவனங்களிலும் நியமிக்கப்பட்ட அதிகாரி.

உங்களால் கோரப்பட்ட தகவலானது தகவல் அதிகாரியினால் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிரான மேன்முறையீட்டை மேற்கொள்ளும் போது நிறுவனங்களில் நியமிக்கப்பட்ட அதிகாரி.

குறித்தளிக்கப்பட்ட அதிகாரியின் முடிவிற்கு எதிராக மேன்முறையீட்டை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட அதிகாரசபை.

உதாரணம் : வேலைவாய்ப்பிற்கான வெற்றிடங்களை நிரப்ப பயன்படுத்தப்பட்ட நியம அடிப்படைகள், வேலைவாய்ப்பிற்கான நேர்முகப் பரீட்சையில் பெற்றுக்கொண்ட புள்ளிகள், உங்கள் குழந்தைக்கான பாடசாலை அனுமதி மறுக்கப்பட்ட காரணங்கள் மற்றும் ஏனையவை.

அனைத்து விதமான தகவல்களையும் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் உங்கள் விண்ணப்பமானது கீழ் வரும் காரணங்களிற்காக மட்டுப்படுத்தப்படலாம் பகிரங்க அக்கரையற்ற தனியாள் விடயங்கள் தேசிய பாதுகாப்பையும் உறவையும் மட்டுப்படுத்தும் தகவல்கள் நாட்டின் பொருளாதாரத்தில் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள், வர்த்தக இரகசியங்கள், தனியாள் மருத்துவ விபரங்கள், பரஸ்பர உறவுகளுக்கிடையிலான இரகசிய தகவல்கள் மூன்றாம் தரப்புடன் தொடர்புடைய தகவல்கள் நீதிமன்ற சுதந்திரத்திற்கும் நீதிமன்ற நடவடிக்கைகளையும் பாதிக்கும் தகவல்கள் சட்டத்தின் கீழாக வழங்கப்பட்டுள்ள பாராளுமன்ற, மாகாணசபைகளின் சிறப்புரிமை சார்ந்த தகவல்கள் பரீட்சிகளின் நேர்மைத்தன்மையை பாதிக்கும் தகவல்கள் தேர்தல் தொடர்பான ஒருசில தகவல்கள் இறுதித்தீர்மானம் எட்டப்பட முன்னரான மந்திரி சபையின் கலந்துரையாடல்.

முக்கிய குறிப்பு: மேற்குறிப்பிட்ட எந்தவொரு சந்தHப்பத்திலும் பொது நலனானது விஞ்சியிருக்குமிடத்து அவ்வாறான தகவல்களையும் தங்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

ஆம். தகவலுக்கான உரிமை சட்டம் மற்றும் விதிமுறைகள் 2004ஃ66 இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கபட்டமை தாமாக வெளிப்படுத்துகையை உறுதி செய்கிறது. அதாவது ஒரு சில தகவல்களை குடிமக்களது விண்ணப்பம் இன்றி பொது அதிகாரசபைகள் வெளிப்படுத்துதல் அவசியமாகும். அந்த தகவல்களில் காலத்திற்க்கு காலம் மேம்படுத்தபட வேண்டும். ஏதேனும் திட்டங்களின் ஆரம்ப தகவல்கள், வரவு செலவு திட்டம், நிறுவனத்தின் தகவல்கள், முடிவுகளும் செயற்பாடுகளும், திறந்த கூட்டங்களின் தகவல்கள் போன்றன அவ்வாறு சுயமாக வெளிப்படுத்தபட வேண்டிய தகவல்களாகும்.

ஆம். தாமாக வெளிப்படுத்துகையின் கீழ் வழங்கப்பட்ட தகவல்கள் பொருத்தமற்றதாகவோ, பிழையானதாகவோ, மேம்படுத்தப்படாததாகவோ இருப்பின் குறித்த பொது அதிகார சபைத் தலைவரிடம் முறையிடலாம்.

செயல்முறை

எழுத்து மூலமான விண்ணப்பம் ஒன்றை பொது நிறுவனங்களில் உள்ள தகவல் அதிகாரியிடம் ஒப்படைக்குக. நீங்கள் குறித்த தகவலைப் பெறவிரும்பும் வடிவத்தினையும், மொழியினையும் குறிப்பிடுக. நீங்கள் கோரிய தகவல் தனிநபர் சுதந்திரம் மற்றும் வாழ்வோடு தொடர்புற்று இருந்தால் அது பற்றியும் குறிப்பிடுக.

கோரப்பட்ட தகவலின் தன்மைனைப் பொறுத்து கட்டணம் பொது அதிகார சபையால் தீர்மானிக்கபடலாம். இல்லாவிடில் 2004/66 இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கபட்ட அட்டவணைக்கு ஏற்ப அறவிடபப்படும். ஏதேனும் கட்டண விபரம் பொது அதிகார சபையினால் பேணப்படுமாயின் அது தொடரப்படும்.

ஆம். நிழற்பிரதி மற்றும் அச்சுப் பிரதி ஆவணங்களின் முதல் 4 பக்கங்களை இலவசமாக பெற முடியும். சாதாரணமாகவே இலவசமாக வழங்கும் தகவல்களையும் கட்டணமின்றி பெறமுடியும்.

ஆம். உங்களிடம் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் அதற்கான பற்றுச்சீட்டை தகவலிற்கான அதிகாரியிடம் கோருவது உங்கள் கடமை.

 • தகவலானது உடனடியாக பெறமுடியுமாயின் தகவலிற்கான அதிகாரி அதனை உடனடியாகப் பெற்றுக்கொடுத்தல் அவசியமாகும்.
 • தகவலிற்கான அதிகாரி உங்கள் விண்ணப்பம் கிடைத்து 14 வேலை நாட்களிற்குள் அதனை வழங்க முடியுமா இல்லையா என்ற முடிவினை கூறுதல் அவசியம்.
 • வழங்க முடியும் என ஒப்புக்கொண்ட நாளில் இருந்து வேலையற்ற நாட்கள் உள்ளடங்கலாக 14 நாட்களிற்குள் அதனை வழங்குதல் அவசியமாகும். தகவலானது எண்ணிக்கை அளவில் பெரிதாக இருக்குமிடத்து அல்லது பெறுவதில் காலதாமதம் நேருமிடத்து 21 நாட்கள் வழங்கப்படலாம்.
 • தகவலானது குடிமக்களது உயிருடன் அல்லது தனிப்பட்ட சுதந்திரத்துடன் தொடர்புற்று இருக்குமாயின் கோரிக்கை விடுவிக்கப்பட்டு 48 மணித்தியாலத்தினுள் வழங்கப்படுதல் அவசியம்.

உங்களது விண்ணப்பத்தையடுத்து வழங்கப்பட்ட பற்றுச்சீட்டின் மூலம் பின்தொடரலாம்.

தகவல் ஒன்றினைக் கோரும் போது அதனை உறுதிப்படுத்தித் தருமாறு கேட்க முடியும். தவறான தகவல்களை வழங்குவது தகவலிற்கான உரிமைச் சட்டத்தின் உறுப்புரை 39(1)(ய) கீழ் குற்றமாகும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் தகவலிற்கான ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்து அதற்காக வழக்கு தொடரவும் வேண்டுகோள் விடுக்கலாம்.

மேன்முறையீடு

 • உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு 14 நாட்களிற்குள் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரியிடம் மேன்முறையீட்டை மேற்கொள்ளலாம்.
 • மேன்முறையீட்டிற்கான கால எல்லை உங்களை மீறிய சந்தர்ப்பங்களில் முடிவடைந்து இருப்பின் குறித்தொதுக்கப்பட்ட அதிகாரி அதனை கருத்தில் கொண்டு உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வர்.
 • மூன்று வார காலத்தினுள் மேன்முறையீட்டின் முடிவானது தெரிவிக்கப்பட வேண்டும்.
 • அவ்வாறு மேன்முறையீட்டின் முடிவானது தெரிவிக்கப்படாவிடின் அல்லது மேன்முறையீடு நிராகரிக்கப்படின் அதற்கெதிராக 2 மாதத்தினுள் தகவலிற்கான ஆணைக்குழுவிடம் மேன்முறையிடலாம்.
 • ஆணைக்குழுவானது 30 நாட்களிற்குள் தகவல் அதிகாரியின் அல்லது குறித்தொதுக்கப்பட்ட அதிகாரியின் முடிவினை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்க வேண்டும்.
 • ஆணைக்குழுவின் முடிவானது உங்களை திருப்பிப்படுத்தாவிடின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்ய முடியும்.

ஆம். தகவலிற்கான உரிமையானது அடிப்படை உரிமையாகும் என்பதால் அந்த உரிமையானது அதனுடன் தொடர்புடைய உரிமையுடன் மீறப்பட்டுள்ளதாக அல்லது மீறப்படவுள்ளதாக நீங்கள் கருதுமிடத்து மீயூயர் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க முடியும் என்பதை அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆம். கீழ்வரும் சந்தர்பங்களில் தகவலிற்கான ஆணைக்குழுவிடம் முறைப்பாட்டை மேற்கொள்ளலாம். தகவல் அதிகாரி அல்லது குறித்தொதுக்கப்பட்ட அதிகாரி

 • உங்கள் விண்ணப்பத்தை ஏற்காவிடில்,
 • காரணமின்றி தகவலை வழங்க மறுக்கும் போது,
 • மேலதிக கட்டணங்களை அறவிடும் போது,
 • தகவலிற்கான விண்ணப்பத்திற்கான செயற்பாடுகளை தகவலிற்கான சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தாதிருக்கும் வேளை,
 • வேண்டுமென்றே மேன்முறையீட்டை சட்டத்திற்கு முரணாக நிராகரிக்கும் போது,
 • முறையான காரணமின்றி குறித்த காலத்தினுள் மேன்முறையீடு தொடர்பான சரியான தீர்மானம் எடுக்காது விடும் போது, ஆணைக்குழுவானது ஒழுக்காற்று குழுவிடம் அவ் அதிகாரிகளிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்குமாறு பணிக்கும். ஒழுக்காற்று குழுவானது 1 மாத காலத்தில் ஆணைக்குழுவிற்கு தனது அறிக்கையை வழங்கும்.

ஆம். இந்த சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட குற்றங்கள் எவராலும் புரியப்படின் அந்தக் குற்றவாளி நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்படும். அவ்வாறு அவரது குற்றமானது நிரூபிக்கப்படும் வேளை சுருக்கம் விசாரணை மூலம் குறித்த குற்றவாளிக்கு

 • 50இ000.00 தண்டப்பணமோ,
 • 2 வருடத்திற்கு மேற்படாத சிறைத்தண்டனையோ,
 • அல்லது தண்டப்பணமும் சிறைத்தண்டனையுமோ வழங்கப்படலாம்.

இவ்வாறான குற்றங்களாவன :

 • வேண்டுமென்றே தகவலை வழங்காதிருத்தல் தவறான ஃ முழுமையற்ற ஃ பொருத்தமற்ற தகவலை வழங்குதல்
 • தகவலை அழித்தல், செயலற்றுப்போகச் செய்தல் தகவலை மாற்றியமைத்தல் அல்லது மறைத்துவிடுதல்
 • ஆணைக்குழுவின் முன் பிரசன்னமாக தவறுதல் அல்லது மறுத்தல்
 • ஆணைக்குழுவின் முன் பிரசன்னமாக ஆனால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை மறுத்தல் அல்லது தகவல்களை வழங்காது இருத்தல்
 • ஆணைக்குழுவின் கட்டளைகளை ஏற்க மறுத்தல் அல்லது ஏற்க தவறுதல்
 • ஆணைக்குழுவின் செயற்பாடுகளிற்கு தடையாக இருத்தல்
 • ஆணைக்குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த தவறுதல்

தனியாள் சுதந்திரம் மற்றும் பிரசுரித்தல்

TOP