தகவலுக்கான உரிமைச் சட்டம் எனப்படுவது (RTI), பொது அதிகார சபையிலுள்ள, தமது தனிப்பட்ட தேவையுடன் தொடர்பற்ற தகவல்களையும் குடிமக்கள் பெறுவதனை அனுமதிக்கும் ஒரு உரிமையாகும்.

இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 14 யு இல் கூறப்பட்டுள்ள தகவலை பெறுவதற்கான உரிமையின் கீழ் பொதுமக்கள் தமக்கு அவசியமான தகவல்களை பெறுவதற்கான அடிப்படை உரிமைக்கு உரித்துடையவர்கள். தகவல் ஒன்று பெறுவதற்கு பின்பற்றப்படவேண்டிய படிமுறைகளாக குறித்த அதிகாரியை அணுகுதல் மற்றும் வழங்கப்படக்கூடிய, நிராகரிக்கப்படக்கூடிய தகவல்கள் போன்றன 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டம் சுட்டிக்காட்டுகின்றது.

பொது அதிகார சபை என்ற வரைமுறையுள் அரச அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், பொது நிறுவனங்கள், உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகளின் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் அனைத்து நீதிமன்றங்கள், நியாயாதிக்க சபைகள் மற்றும் நீதிச் சேவைக்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளடங்கும்.

இச்சட்டத்தின் கீழ் பொது அதிகார சபைகள் தகவல்களை பதிவு செய்து வைத்திருப்பது அவசியமாகும். இது பொது மக்களிற்கு உரிய நேரத்திலும், அவசியமான காலப்பகுதியிலும் தகவல்களை விநியோகிக்க ஏதுவாய் அமையும்.

RTI சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதனால், பொது அதிகார சபைகள் பொதுமக்களிற்கு வகைகூறலாக இருந்து, பொது அதிகாரசபைகளின் வெளிப்படைத் தன்மையை உருவாக்குவதற்கு ஊக்குவிக்கின்றது. இதன் வழியாக, குடிமக்கள் இந்த சட்டத்துடன் முனைப்பாக இணைவதனூடாக அரசியலில் பங்கேற்பதிலும் இணைந்து ஊழலிற்கு எதிரான மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.

உலக நாட்டவர் அனைவரும் அரசியலமைப்பின் உறுப்புரைகள் மூலமாக இந்த சட்டபூர்வ உரிமையை பெற்றுள்ளார்கள். எவ்வாறாயினும், அவர்கள் அனைவரும் அடிப்படை விழுமியங்களை நெறிப்படுத்தும் சர்வதேச சட்டங்களின் சுதந்திரத்தின் மூலம் வழிப்படுத்தப்படுகின்றார்கள். ”

அந்த விழுமியங்களாவன:

1. உச்சக்கட்ட வெளிப்படுத்துகைத் தத்துவம்.

2. பொது அதிகாரசபைகள் முக்கிய தகவல்களை வெளிப்படுத்தும் கடமை.

3. திறந்த அரசாங்கத்தை ஊக்கப்படுத்தும் வகையிலான பொது அதிகார சபைகளின் துடிப்பான தன்மை.

4. வரைமுறைகள் தெளிவாகவும்இ குறுகியதாகவும் அமைதல் வேண்டும்

5. செயல்முறையானது தகவலை பெற வழிவகுத்தல்.

6. வேண்டுதல்களை நலிவடையச் செய்யும் அதிகளவான கட்டணங்கள் தடை செய்யப்படுதல்.

7. பொது மக்கள் சந்திப்பு அதிகரிக்கப்படுதல்.

8. அதிகளவிலான வெளிபடுத்துகை தன்மையை உறுதி செய்ய சட்டங்கள் திருத்தப்படல் அல்லது அகற்றப்படல்.

9. முறைகேடுகள் பற்றிய தகவல்களை வெளியிடுவோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுதல்.

தகவலை வெளியிடுவதால் ஏற்படும் பாதிப்பிலும் பார்க்க பொது நலனானது விஞ்சியிருக்குமாயின் குறித்த தகவலை வழங்க வரையறை உள்ள சந்தர்ப்பத்திலும் தகவலை வழங்குவது அவசியமாகும். எனவே

இச்சட்டம் மிகவும் தனித்துவமானதாகும். ஆகவே தகவலுக்கான விண்ணப்பத்தின் மூலம் தமது உரிமையை பயன்படுத்தும் குடிமக்களிற்கு இது ஒரு வரப்பிரசாதமாகும்.

RTI சட்டமானது இலங்கை குடிமக்கள் தமது தகவலுக்கான சனநாயக உரிமையை நிலை

நாட்ட உதவுவதோடு, நல்லாட்சிக்கும் சனநாயகத்திக்கும் வழிவகுக்கும் வகைகூறலையும் வெளிபடுத்துகை தன்மையையும் ஊக்கப்படுத்துவதால் பொது அதிகாரசபைகளில் ஊழலை குறைக்க உறுதுணையாகின்றது.

தகவலைப் பெறுவதற்கான செயன்முறைகள்

STEP 01

1. பொது அதிகாரசபைகளில் அதற்குரிய தகவல் அலுவலரை இனங்காணல்.

Visit www.rti.gov.lk  for more details of Information Officers.

STEP 02

2. தகவலுக்கான எழுத்து மூலமான கோரிக்கையை தகவல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தங்களால் எந்தளவு தகவல்களையும் கோர முடியும்.

Download: Visit RTI FORM 01

 

STEP 03

3. தகவல் அலுவலரிடமிருந்து உங்கள் விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டை பெற்றுக்கொள்ளவும்.

Download: Acknowledgement form

STEP 04

4. தகவல் அலுவலர் தங்களுக்கு பற்றுச்சீட்டை வழங்கிய நாளிலிருந்து 14 வேலை நாட்களுக்குள் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார்.

Download: RTI FORM 4

Download: RTI FORM 5

 

STEP 05

5. தகவல் வழங்குவதென தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் அன்றைய தினத்திலிருந்து 14 வேலை நாட்களுக்குள் தகவல்களை உங்களுக்கு வழங்க வேண்டும். தகவல்களை வழங்குவதற்கு மறுக்கும் பட்சத்தில், அதற்கான காரணத்தையும் அவர் குறிப்பிட வேண்டும்.

STEP 06

6. வழங்கப்பட்ட தகவல் குறித்து நீங்கள் திருப்திகொள்ளவில்லையாயின் அதற்கென குறித்தொதுக்கப்பட்ட அதிகாரியிடம் அன்றைய தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்ய முடியும்.

Download: RTI FORM 10

STEP 07

7. குறித்தொதுக்கப்பட்ட அந்த அதிகாரி தகவல்களை வழங்குவதற்கு மறுக்கும் பட்சத்தில் அவ்வாறு மறுக்கும் தினத்திலிருந்து இரண்டு மாதங்களுக்குள் தகவலுக்கான உரிமை ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்ய முடியும்.

STEP 08

8. ஆணைக்குழுவின் தீர்மானம் குறித்தும் நீங்கள் திருப்பதிகொள்ளவில்லையாயின் அதற்கெதிராக தீர்ப்பளிக்கப்பட்ட தினத்திலிருந்து ஒருமாதகாலத்திற்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உதவியையும் நாட முடியும்.

END

தகவலுக்கான உரிமை தற்பொழுது உங்களுக்கும். அதை எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?

தகவல் விளக்க வடிவமைப்பு - தகவலைப் பெறுவதற்கான செயன்முறைகள்

Click above image for view full version of Info-graphic chart for Right to information process.

பின்பற்றப்பட வேண்டியவை

எளிமையான விண்ணப்பத்தை மேற்கொள்ளல்.

குறுகியதாகவும், துல்லியமாகவும் விண்ணப்பத்தை மேற்கொள்ளல்.

முடிந்தளவு வினாக்களை கேட்டல் - தேவைப்படும் இடத்து மாத்திரம்.

கேள்விக் குறிகளுடன் முடிவடையாதவாறு வினாக்களை எழுப்ப முயற்சிக்கவும். உங்களது விண்ணப்பத்தை ஒரு கூற்றாக வடிவமைப்பதுடன் முடிந்தளவு பதிவுகளையும், ஆவணங்களையும் கோருவதற்கு முயற்சியுங்கள்.

தகவலின் பின்னணி தொடர்பான குறுகிய ஆய்வினை மேற்கொண்டு மிகவும் பொருத்தமான பொது அதிகார சபையினை தெரிவு செய்து இலக்குடன் தொடர்புடைய கோள்விகளை மேற்கொள்ளவும். உதாரணம்: நீங்கள் பொருத்தமானது எனக் கருதும் பொது அதிகாரசபையின் உத்தியோகபூர்வ வலைத்தளத்திற்கு சென்று உங்களிற்கு தேவையான தகவல் அதிலே பெறக்கூடியதாக உள்ளதா என ஆராய்க.

கட்டாயமாக பதிவில் இருக்க வேண்டிய தகவல்களை கோருங்கள்.

நீங்கள் கோரிய தகவலை, இனங்காணக்கூடிய தரவுகளை தகவல் அதிகாரிக்கு வழங்குங்கள்

தகவலானது 48 மணித்தியாலத்தினுள் தேவைப்படுமிடத்து மாத்திரம் தகவலின் தேவைக்கான காரணத்தை கூறுங்கள். ஏனெனில் அது ஒருவருடைய வாழ்வையோ தனிமனித சுதந்திரத்தினையோ பாதுகாப்பது அவசியமானதாகும்.

கட்டாயமாக தேவைப்படுமிடத்து இதர ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க. (ஆகவே நீங்கள் எவரதும் கட்டாயத்திலும் ஆவணங்களை இணைக்கத் தேவையில்லை)

பொது அதிகார சபையினர் எவ்வாறு உங்களது விண்ணப்பத்தை நிராகரிக்க முயற்சிப்பார்கள் என்பதை உங்கள் விண்ணப்பத்தை தயாரிக்கும் போது மனதில் நிறுத்தி செயற்படுக.

பொது அதிகார சபையானது தாமாகவே வெளிப்படுத்த வேண்டிய தகவலை நீங்கள் கோருவீர்களானால் அவர்களது (தாமாகவே வெளியிடுகைக்கான) கடமையை உங்களது விண்ணப்பத்தில் குறிப்பிடுக.

தவிர்க்கப்பட வேண்டியவை

உங்களது விண்ணப்பத்தை விசாரணைகளாக மேற்கொள்ள வேண்டாம்.

அதிகமான ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைத்து பாரிய வேண்டுகோளை மேற்கொள்ள வேண்டாம்.

விண்ணப்பத்திற்கான காரணத்தை கட்டாயம் கொடுக்க வேண்டுமெனக் கருத வேண்டாம்.

சாதாரணமாக பதிவு செய்யப்படாத ஆலோசனைகள், கருத்துக்கள், நோக்கங்கள் தொடர்பாக விண்ணப்பிக்க வேண்டாம்.

பொது அதிகார சபைகளில் காணப்படும் தகவல் அலுவலரே தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் ஒன்று கோரப்படும் போது அதனை வழங்கவேண்டிய பொறுப்புடையவர் ஆவார்.

தகவல் அலுவலர் தமது ஏனைய பணிகளிலும் பார்க்க தகவலுக்கான உரிமைச் சட்டம் சார்ந்த கடமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவர்களது கடமையாகும்.

தகவல் அலுவலர் பிரசன்னமாகாத வேளை, குறித்த அலுவலகத்தின் தலைவர் தகவல் அலுவலரின் கடமைகளை மேற்கொள்ள கடமைப்பட்டவர் ஆவார்.

கடமைகள்

தகவலுக்கான விண்ணப்பத்தை பூரணப்படுத்த தேவையான நியாயமான உதவிகளை குடிமக்களிற்கு வழங்கவேண்டும்.

வாய்மொழி மூலமான விண்ணப்பங்கள் குடிமக்களால் மேற்கொள்ளப்படும் போது அவ் விண்ணப்பத்தை எழுத்து வடிவில் மாற்றுவதோடு அதில் குறித்த குடிமக்களின் கையெழுத்தினையோ அல்லது கை விரல் அடையாளத்தினையோ பெறவேண்டியது அவரது கடமையாகும்.

விண்ணப்பப்படிவத்துடன் பெறப்பட்ட மின்னஞ்சல் பிரதியினையோ அல்லது தொலைநகல் பிரதியினையோ இணைக்கவேண்டும்.

ஏதாவது வகையில் விண்ணப்பத்தில் தவறு இருக்கும் வேளை அதனை விண்ணப்பதாரிக்கு தெரியப்படுத்தல் வேண்டும்.

கோரப்பட்ட தகவலானது வேறொரு பொது அதிகார சபையிடம் இருக்குமாயின், தகவல் அதிகாரி எழுத்துமூலமான கோரிக்கை ஒன்றினை குறித்த பொது அதிகார சபைக்கு மேற்கொண்டு அது தொடர்பாக 7 நாட்களிற்குள் குறித்த விண்ணப்பதாரிக்கு தெரிவித்தல் வேண்டும்.

கோரப்பட்ட தகவலானது ஏற்கனவே பொதுப்பயன்பாட்டில் இருக்குமாயின் அது தொடர்பாக விண்ணப்பதாரிக்கு அறியப்படுத்தல் வேண்டும். மேலும் 14 நாட்களிற்குள் அத் தகவல் எங்கு உள்ளது என்பது குறித்தும் தெரியப்படுத்தல் வேண்டும்.

அனைவராலும் வழங்கப்படும் தகவல்களின் பதிவினை பேணுதல் வேண்டும்.

பொறுப்புக்கள்

தகவலுக்கான விண்ணப்பம் பெறப்பட்ட வேளை அதனைப் பெற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டினை வழங்குதல்.

பதிவு இலக்கத்துடன் பெறப்பட்ட விண்ணப்பமானது பதியப்பட வேண்டும்.

தகவலானது குடிமக்களிற்கு வழங்க முடியுமாயின் விண்ணப்பத்தை பெற்றதில் இருந்து 14 நாட்களிற்கு அது தொடர்பாக தெரியப்படுத்தல் வேண்டும்.

தகவல் அதிகாரியினால் தகவலானது குடிமக்களிற்கு மறுக்கப்படுமாயின் அது தொடர்பாக எழுத்து மூலமான அறிவித்தல் குடிமக்களிற்கு வழங்கப்படல் வேண்டும்.

தகவல் அதிகாரிக்கு 14 நாட்களிற்கு மேலதிகமாக நாட்கள் தேவைப்படுமாயின் அது தொடர்பாக குடிமக்களிற்கு எழுத்து மூலமாக 21 நாட்களாக நீடித்துள்ளமை பற்றி அறியத்தருதல் வேண்டும்.

உங்களால் கோரப்பட்ட தகவலானது தகவல் அதிகாரியினால் மறுக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு எதிரான மேன்முறையீட்டை மேற்கொள்வதற்காக பொது அதிகாரசபைகளில் நியமிக்கப்பட்ட அதிகாரி.

பின்வரும் காரணங்களுக்காக இவரிடம் நீங்கள் மேன்முறையீட்டை செய்யலாம்

மட்டுப்படுத்தபட்ட உறுப்புரையின் கீழ் பட்டியலிடப்பட்ட சந்தர்ப்பங்களில் தகவல் அதிகாரி விண்ணப்பத்தை நிராகரிக்கும் போது

சட்டத்தில் குறிப்பிடப்பட்ட கால அவகாசங்கள் மீறப்படும் போது

வழங்கப்பட்ட தகவலானது தவறானதாக மற்றும் தவறாக வழிநடத்த கூடியதாக மற்றும் அரைகுறையாக காணப்படும் போது

தகவல் அதிகாரியால் அதிகமான கட்டணம் அறவிடப்படும் போது

கோரப்பட்ட தகவலை தர முடியாது என தகவல் அதிகாரி மறுக்கும் போது

விண்ணப்பதாரியிடம் குறித்த தகவல்கள் மாற்றபட்டு, அழிக்கப்பட்டு, அநீதியான முறையில் மறுக்கப்பட்டு இருக்கும் என நியாயமான காரணங்கள் காணப்படும் வேளை

குறித்த ஆணைக்குழுவானது 5 பேர் கொண்ட குழுவாகும். இவர்கள் பொருத்தமான அறிவு, அனுபவம் மற்றும் அரச ஆட்சி, பொது நிர்வாகம், சமூக சேவை, பத்திரிகைத்துறை, விஞ்ஞான தொழில் நுட்பம் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் நிபுணத்துவமும் கொண்டிருக்கவேண்டும்.

ஆணைக்குழுவானது தன்னகத்தே அதிகளவிலான அதிகாரங்களை கொண்டிருப்பதோடு, பொதுமக்கள் எந்தவொரு தங்கு தடையுமற்று தகவலுக்கான உரிமையை அனுபவிப்பதை உறுதி செய்யவும் பொறுப்புடையதாகும்.

தகவலுக்கான ஆணைக்குழுவின் தொடர்பு விபரங்கள் 

அறை இல: 203-204

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டப வளாகம்

பௌத்தாலோக மாவத்தை

கொழும்பு 7

தொலைபேசி : (+94)  0112691625

மின்னஞ்சல் : [email protected]

ஆணைக்குழு

பொது அதிகார சபைகளிற்கு ஒதுக்கப்பட்டுள்ள கடமைகளை அவை சரியாகச் செய்கின்றனவா என மேற்பார்வை செய்து உறுதிப்படுத்துதல்.

  • விண்ணப்பித்த தகவலைப் பெறுவதற்காக பொதுமக்கள் செலுத்தவேண்டிய கட்டணத்தைத் தீர்மானித்தல்.
  • கட்டணமின்றி வழங்கக்கூடிய தகவல்களைத் தீர்மானித்தல்.
  • தகவலுக்கான உரிமைச் சட்டம் தங்கு தடையின்றி அமுல்படுத்தப்பட தகவல் அதிகாரிகளை பயிற்றுவித்தல்.
  • பொது அதிகார சபைகள் எவ்வாறு தமது உள்ளக பதிவூகளை பேணவேண்டும் என்பது பற்றி அறிவூறுத்துதல்.
  • சட்டத்தின் கீழான தேவைப்பாடுகளையும் தனிநபர் உரிமைகளையும் பகிரங்கப்படுத்தல்.

அதிகாரங்கள்

  • விசாரணைகளை நடாத்தவூம், தேவைப்படுவோரை விசாரணைக்கு அழைக்கவூம் அதிகாரமுடையது.
  • பொது அதிகார சபையில் உள்ள எவ்விதமான தகவல்களையும் விசாரிக்கும் அதிகாரமுடையது. அத் தகவலானது சட்டத்தின் கீழ் ஒரு நபரிற்கு மறுக்கப்படக்கூடிய சந்தர்ப்பத்திலும் அதனை விசாரிக்கும் அதிகாரமுடையது.
  • குறித்த வடிவில் தகவலை வழங்குமாறு பொது அதிகார சபையினைப் பணிக்க மற்றும் பொது அதிகார சபையில் உள்ள தகவல்களை வெளியிடுவதற்கும் அதிகாரமுடையது.
  • தகவலானது மறுக்கப்பட்ட, தவறான தகவல் வழங்கப்பட்ட, உரிய நேரத்தில்

தகவல் வழங்கப்படாத, அதிகளவிலான கட்டணம் அறவிடப்பட்ட சந்தர்ப்பங்களில் ஒருவரது மேன்முறையீட்டை விசாரிக்க அதிகாரமுடையது.

  • சட்டத்திற்கேற்ப உரிய நேரத்தில் தகவல் வழங்கப்படாத வேளைஇ அறவிடப்பட்ட கட்டணத்தை நேரடியாக மீளளிக்கும் அதிகாரமுடையது.
  • குடிமகன் ஒருவரால் கோரப்பட்ட தகவலானது மூன்றாம் தரப்பினரால் வழங்கப்பட்டு அது குறித்து மூன்றாந் தரப்பினரால் தகவலை வெளியிட எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் வேளை, ஆணைக்குழுவிற்கு அதனை நேரடியாக வெளியிடும் அதிகாரமுண்டு.

வெளியிடாமையின் மூலமான தனிநபர் நலனிலும் பார்க்க வெளியிடுவதனால் அதிக

நலன் உண்டாகும் என என்னும் பட்சத்தில் அதனை வெளியிடும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு உண்டு.

  • கீழ் வரும் விதிமுறைகளை உண்டாக்க அதிகாரமுண்டு:

(ய) ஆணைக்குழுவிற்கு மேன்முறையீடுகள் மேற்கொள்ளும் முறை மற்றும்

வடிவத்தினைத் தீர்மானித்தல்.

(டி) விசாரணைகளை கொண்டுநடாத்தும் செயல்முறையைத் தீர்மானித்தல்.

(உ) தகவலை வழங்குவதற்கான கட்டணத்தைத் தீர்மானித்தல்.

(ன) பொது அதிகாரசபைகளினால் ஆணைக்குழுவிற்கு வருடாந்தம் சமர்ப்பிக்கவேண்டிய

அறிக்கைகளின் வடிவமைப்பைத் தீர்மானித்தல்

(இந்த அறிக்கையானது வருடாந்தம் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை, வருடாந்தம் சேகரிக்கப்பட்ட கட்டண விபரம், நிராகரிக்கபட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த வழங்கப்பட்ட ஆலோசனைகள் என்பன உள்ளடங்கும்)

  • வருடாந்தம் இருமுறை அமைச்சர்கள் குறித்த அறிக்கைகள் பிரசுரிக்கப்பட வேண்டிய வடிவத்தினை தீர்மானித்தல்

கடமைப்பாடு

  • தனது முடிவூகளிற்கான காரணங்களை எழுத்து மூலமாக பொது மக்களிற்கும், தகவல் அதிகாரிக்கும், பொது அதிகார சபைகளிற்கும் வழங்க வேண்டும்.
  • வருடம் ஒருமுறையாவது தனது செயலறிக்கையை தயாரித்து அந்த அறிக்கை ஒவ்வொன்றும் பாராளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட வேண்டியதும், சனாதிபதிக்கு அனுப்பப்பட வேண்டியதும் ஆணைக்குழுவின் கடமையாகும்.
  • தகவல் அதிகாரி காரணமின்றி தகவலை வழங்க மறுக்கும் சந்தர்ப்பத்தில், தகவலுக்கான விண்ணப்பத்தினை பெற மறுக்கும் சந்தர்ப்பத்தில் மற்றும் அதிகளவிலான கட்டணத்தினை அறவிட முற்படும் போது குறிப்பிட்ட ஒழுக்காற்று குழுவிற்கு அறிவித்தல் வேண்டும்.

தகவலுக்கான உரிமைச் சட்ட விண்ணப்பம் தொடர்பான வெற்றிகரமான பயணத்தின் விபரணம் கீழே தரப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களிற்காக பொது அதிகார அதிகார சபையிடம் விண்ணப்பிக்கபடும் தகவலுக்கான விண்ணப்பங்கள் பல்வேறு வழிமுறைகளில் மேற்கொள்ளப்படலாம். ஆனால் வெற்றிகரமான விண்ணப்பம் ஒன்றிற்கான பொறிமுறை இதுவேயாகும். டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா தகவலுக்கான விண்ணப்பங்களை மேற்கொண்ட போதிலும் தேர்தல் ஆணைக்குழுவிடம் மேற்கொண்ட விண்ணப்பமே வெற்றிகரமான விண்ணப்பமாகும். மாசி மாதம் 7ம் திகதி 2017ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் மூலம் தேர்தல் ஆணைக்குழுவானது தமது வருடத்திற்கான நிகழ்ச்சி நிரலையும், பொருத்தமான அறிவிப்புகளையும் மற்றும் பற்றிச்சீட்டுகளையும் தமது தகவல் அதிகாரி மூலம் வழங்கியது. பயணத்தின் விபரணம் கீழே.

START
FEB 09

SUBMISSION

எமக்கு தேவைப்படும் தகவலினை தீர்மானித்ததுடன்இ கடந்த 5 வருட காலத்தில் அனைத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளினதும் நிதி அறிக்கையினை கோருவதற்கான தீர்மானத்தினையும் மேற்கொண்டோம்.

எமக்குத் தேவைப்பட்ட தகவலினை விபரமாகக் கூறி தகவலுக்கான எமது விண்ணப்பக் கடிதத்தை தயாரித்தோம்.

தேர்தல் ஆணைக்குழுவிடம் எமது விண்ணப்பக் கடிதத்தை நேரடியாக சமர்ப்பித்தோம்.

விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டதற்கான பற்றுச்சீட்டை உடனடியாக தயாரித்துத் தந்தார்கள்.

FEB 20

RESPONSE

குறிப்பிட்ட கட்டணத்தினை செலுத்தி நாம் விண்ணப்பித்த தகவலைப் பெறுமாறு அறிவுறுதல் கடிதம் ஒன்றினை நாம் பெற்றுக்கொண்டோம்.

FEB 22

PAYMENT

குறித்த கட்டணத்தினை பணமாக நாம் செலுத்தினோம்.

MAR 15

INFORMATION PROVIDED

குறித்த தகவலைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டோம்

கடந்த 5 வருட காலத்தில் அனைத்து பதிவு செய்யப்பட்ட கட்சிகளினது நிதி அறிக்கையினை பெற்றுக்கொண்டோம்.

END
வடிவம் அளவு பக்கங்களின் எண்ணிக்கை தொகை
நிழற்பிரதி A4 Size முதல் நான்கு பக்கங்கள் இலவசம்
A4 Size சிறியது ஒரு பக்கம் Rs 2
இரண்டு பக்கம் Rs 4
Legal size ஒரு பக்கம் Rs 4
இரண்டு பக்கம் Rs 8
மேற்குறிப்பிட்டதை விட பெரிய அளவு பிரதிக்கான கட்டணம்
Printout A4 size முதல் நான்கு பக்கங்கள் இலவசம்
A4 Size  சிறியது ஒரு பக்கம் Rs 4
இரண்டு பக்கம் Rs 8
Legal Size  தொடக்கம் A3 வரை ஒரு பக்கம் Rs 5
இரண்டு பக்கம் Rs 10
மேற்குறிப்பிட்டதை விட பெரிய அளவு பிரதிக்கான கட்டணம்
Diskette, CD, USBஇல் பதிவதற்கு  Or  பொது அதிகாரசபையால் வழங்கப்பட்ட ஏனைய இலத்திரனியல் சாதனத்தில்  பதிவதற்கு Rs 20
ஏதேனும் ஆவணத்தை அல்லது உசாத்துணையை வாசிக்கஇ பிரிசீலிக்க மற்றும்  ஏதேனும் கட்டுமானத்தை வாசிக்க, பரிசீலிக்க பிரதிக்கான கட்டணம்
Study or inspection of any document or material or inspection of a construction site முதல் மணித்தியாலம்  இலவசம். அடுத்துவரும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும் ரூபா 50
மாதிரிகள் பிரதிக்கான கட்டணம்
மின்னஞ்சல் இலவசம்

If the Public Authority has a prescribed fee schedule that has been issued by circulars or regulations, that schedule will continue to be applicable.

Mode of Payment:

  • In cash paid to the Information Officer
  • Bank Draft addressed to the Accounts Officer of the Public Authority
  • The possibility of taking notes, copying extracts, photographing the material with a phone or handheld camera, will depend on the discretion of the Public Authority and where the prescribed fee for accessing the information is paid in full.
  • If the citizen feels that the fee charged by the Information Officer is excessive, he can appeal to the designated officer within 14 days.
  • The making of an appeal to the designated officer or the commission does not require the payment of a fee.
  • If a citizen is successful in making an Appeal either to the designated officer or to the commission, he is entitled to receive the information requested by him/her free of charge.
TOP